Thursday, May 1, 2008

மலையாளியின் இன உணர்வும் தமிழனின் நலக்கேடும்

பெரியாற்றின் வடிமுகப் பரப்பில் தமிழ்நாட்டிலும் சில பகுதிகள் உள்ளன. இந்தப் பரப்பளவு 114 சதுர கி.மீ. - அதாவது மொத்தப் பரப்பளவில் 20% .

பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவில் 88.90 விழுக்காடு தமிழகத்தின் எல்லைக்குள் பெய்யும் மழை.

பெரியாற்றில் கேரள அரசு கட்டியுள்ள அணைகளின் எண்ணிக்கை 16. இந்த அனைத்து அணைகளின் நீரில் தமிழ்நாடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது 9% மட்டுமே.

மீன் பிடிக்கும் உரிமையையும் சுற்றுலா உரிமையையும் கேரளத்திற்கு தமிழ்நாடு விட்டுக் கொடத்துள்ளது.

இதனால் , தமிழ்நாட்டிற்கு ஒவ்வோராண்டும் ஏற்படும் இழப்பு 300 கோடி ரூபாய் .இந்த வருமானம் முழுக்க கேரளாவிற்குத்தான் கிடைக்கிறது.

பெரியாறு அணை கட்டப்படாமல் இருந்திருந்தால் , தமிழ்நாடு மேற்கூறிய உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் இத்தொகை கேரளத்திற்குக் கிடைத்திருக்காது.

152 அடி உயரத்திலிருந்து 136 அடியாகக் குறைக்க கேரள அரசு பிடிவாதமாக வற்புறுத்தியதால் , நடுவணரசு நீர்ப்பாசனத்துறை தலையிட்டு அணையைப் பலப்படுத்தும் வேலைகள் முடியும் வரை குறைத்திட உத்தரவிட்டது. பலப்படுத்திய பின்னும் இந்நிலை தான் தொடர்கிறது.

இதனால் பாதிக்க்கப்படும் 5 மாவட்டங்கள்

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்,

தரிசாக மாறிய நிலம் : 38,000 ஏக்கர்
இரண்டு போகத்திலிருந்து
ஒரு போகத்திற்கு மாறிய நிலம் : 86,000 ஏக்கர்
ஆற்றுப்பாசனம் இழந்து
ஆழ்குழாய்க்குத் தள்ளப்பட்ட நிலம் : 53,000 ஏக்கர்
மொத்தம் : 1,37,000 ஏக்கர்

இதன் விளைவாக , ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இழப்பு 130.80 கோடி ரூபாய்
28 ஆண்டுக்கால மொத்த இழப்பு 3662.40 கோடி ரூபாய்

நன்றி : பழ. நெடுமாறன் தினமணியில் எழுதிய , பெரியாறு அணையா? தேசிய ஒருமைப்பாடா? என்ற கட்டுரையிலிருந்து......

தகவல்: சிதம்பரன்.கி, ஈரோடை